திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய மறியல் போராட்டம்! சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது
திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய மறியல் போராட்டம்! சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் பேங்க் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இது முக்கிய கோரிக்கைகளாக விஷம் போல ஏறும் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் புதிய கல்விக் கொள்கையை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் பொதுத் துறைகளை தனியார் மையமாக கூடாது.பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் கட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கதாக கூறிய வாக்குறுதி உடனடியாக நிறைவேற்று என பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது திடீரென திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்