பழனியில் திராவிட விடுதலை கழகம் சார்பில் பரம்கன்ஸ் ஆச்சாரியாவுககு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது
பழனியில் திராவிட விடுதலை கழகம் சார்பில் பரம்கன்ஸ் ஆச்சாரியாவுககு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் செப் 7,திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரம்கன்ஸ் ஆச்சாரியாவை கைது செய்யக்கோரி பழனி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.முன்னதாக சனாதானத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசியதை தவறாக திரித்து சமூக வலைதளங்கள் மற்றும் சில கட்சியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். இதனிடையே ராஜஸ்தானை சேர்ந்த பரம்கன்ஸ் ஆச்சாரியா,அமைச்சர் உதயநிதியை கொலை செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். இது இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது .எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.