மூதாட்டியை கொன்ற யானையைப் பிடிக்க 4 குழுக்கள் அமைப்பு.
மூதாட்டியை கொன்ற யானையைப் பிடிக்க 4 குழுக்கள் அமைப்பு.
நீலகிரி நவம்பர் 23-
நீலகிரி மாவட்டம் தேவாலா வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்ற மூதாட்டி யானை தாக்கி இறந்தார். இதையடுத்து பொதுமக்கள், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களி டம் மயக்க ஊசி செலு த்தி பிடிப்பதற்கான நடவடி க்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மேலும் தலைமை வன உயிரின பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வன பணியாளர்கள் உள்ளி ட்ட 60 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வனத்திற்குள் சென்று, யானையின் நடமாட்டத்தை கண்கா–ணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானையை பிடி ப்பது குறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தலைமையில் நாடுகாணி பகுதியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கூடலூா், பந்தலூா் மற்றும் நாடுகாணி வனத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில் யானையை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். யானையின் நட–மாட்டம் குறித்தும், அதனை பாதுகாப்பாக பிடிப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். யானையை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து விஜய், வசீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழை க்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை–யை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்ப ட்ட யானை தேவாலா நீர்மட்டம் பகுதியில்
தமிழக, கேரளா எல்லை வனப்பகுதியில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த யானை ஊருக்குள் வரலாம் என்பதால் யானையை இரவுநேரத்திலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்து–றையினர் கூறியதாவது:- யானை கடந்த 2 நாட்களாக கூடலூர் பகதியில் அடிக்கடி செல்லும் இடங்களில் தென்படவில்லை. யானை யை கண்காணித்த போது கேரள எல்லைக்கு அருகே ஒரு கூட்டத்துடன் நிற்பது கண்டறியப்பட்டது. இந்த யானையை கண்கா ணிப்பதற்காக 4 குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் யானையை கண்டறியும் பட்சத்தில் 5-வது குழுவான டிராக்கிங் குழு அந்த இடத்திற்கு சென்று யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொ–ள்ளும். 4 குழுக்களும் விழிப்பு–ணர்வுடன் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். யானையை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட வனத்துறை சிறப்பு நிபுணர்கள் வரவ–ழைக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.