அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் – தத்தளிக்கும் நீலகிரி திமுக….

Spread the love

அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் – தத்தளிக்கும் நீலகிரி திமுக….

நீலகிரி டிச 31,

 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரியில் தொடங்கினார்.நீலகிரி மாவட்ட மக்களின் ஆதரவும் அதிகரித்து வரும் நிலையில் தனது பணியை அசுர வேகத்தில் செய்து வருவதால் அங்குள்ள திமுக உடன்பிறப்புகள் சற்றே அதிர்ச்சியில் உள்ளதாகவும் எப்படி தேர்தல் பணியை துவங்குவது என தெரியாமல் தத்தளித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

 

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்கெட் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் ஆய்வு மேற்கொண்டார் பழைய மார்கெட் கடைகளை இடிக்கும் பணி பார்வையிட்டார்.

 

மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது, செயலாளர் குணசேகர் பொருளாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மார்கெட் வியாபாரிகளின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை பற்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மார்கெட் கடைகள் டெண்டருக்காகவே இடிக்க படுகின்றது. டெண்டருக்காகவே மார்கெட் இடம் மாற்றபடுகிறது என்பதை நான் சொல்வில்லை திமுக உறுப்பினரே நகர மன்ற கூட்டத்தில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

நாங்கள் மார்கெட் வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம் வியாபாரிகள் யாரும் பாதிக்க கூடாது இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் தலைமுறை தலைமுறையாய் இந்த கடைகளை மட்டும் நம்பி உள்ள ஆயிரகணக்கான குடும்பங்கள் பாதுகாக்க படவேண்டும்

தற்காலிக கடைகள் பகுதியில் மின்சாரம், குடிநீர்,கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றி தரவேண்டும்

 

தே.மு.திக தலைவர் விஜயகாந்த் அவர்களின்  மறைவுக்கு தே.மு.தி க தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலை தெரிவிக்கிறேன். விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.அவரது மறைவு தமிழ்நாடு அரசியலுக்கு பேரிழப்பு.

 

இயற்கை பேரிடரான சென்னை,தென் மாவட்ட மழை சேதங்களுக்கு முக்கிய காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் பாதுகாக்ப்பட வேண்டும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக சுற்றுலாதளங்களில் அமைக்கபட்ட வாட்டர் ஏ.டி.எம்க்கள் பல இடங்களில் இயங்குவதில்லை,அவைகளை சீர்செய்ய வேண்டும் என பேசினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் ,மாவட்ட பொருளாளர் தர்மன் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மண்டல் தலைவர் பிரவீன்,அலுவலக செயலாளர் அருண்குமார், நகர பொதுச்செயலாளர்,சுரேஷ் குமார், நகரச் செயலாளர் ராகேஷ், கிளைத் தலைவர் சதீஷ், மேல் கவ்வட்டி சுரேஷ், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன், மாவட்ட ஐடி விங் செயலாளர் சமந்தா, பிறமொழி அணி மாவட்ட தலைவர் நீல் பிரகாஷ்.நகர மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி மாவட்ட அமைப்பு சாரா துணைத் தலைவர் ஆட்டோ மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னா கேசவன், நகர துணை தலைவர் சுதாகர், மாவட்ட வரத்து கனி பொதுச்செயலாளர் நாகராஜ், உதகை நகர பட்டியல் அணி துணைத் தலைவர் முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்’ 6 வது பதிப்பு கோவையின் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம்!
Next post வாசம் பில்டர்ஸ் 10 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகளிர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி துவக்கி வைத்தார்