கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடந்து
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடந்து
திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜோலார்பேட்டை மாணிக்கம் மஹாலில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடந்தது. இம்முகாமினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் பேசிய மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜா முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்து சென்ற மாபெரும் திட்டங்களை நினைவு கூர்ந்து பேசினார்.மேலும் கடந்த இரண்டாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்களையும், தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் முதன்மையான முதல்வராக திகழ்கின்றார் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி,ஜோலார்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியா சதிஷ் குமார்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ் குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.