காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

Spread the love
காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
தர்மபுரி ஆக் 26,
தருமபுரி மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நடந்தது.
 இக்கருத்தரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைமை இயக்குநர் தீபக்,தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் காலநிலை சிறப்பு நோக்கத்திற்கான தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலையை எதிர்க்கும் எதிர்காலத்தை உருவாக்க தமிழ்நாட்டை காலநிலை ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணியின் இலக்காகும்.
 இப்பணியின் கீழ் நிலையான விவசாயம், தட்பவெப்ப நிலைத்தன்மை, நீர் வளங்கள், காடு மற்றும் பல்லுயிர் பெருக்கம், கடலோரப் பகுதி மேலாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், உமிழ்வு குறைப்பு, போக்குவரத்து போன்றவை கவனம் செலுத்தும் பகுதிகளாக உள்ளன.
 விலைமதிப்பற்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம், பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான பசுமைத் தமிழ்நாடு மிஷன், தமிழ்நாடு காலநிலை ஆகிய மூன்று முக்கிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தட்பவெப்ப நிலையைத் தாங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான மாற்றப் பணிகள் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு பசுமை காலநிலை நிதியம் காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள், பசுமைப் பள்ளிகள் மற்றும் பசுமைக் கோயில்கள் போன்ற முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்காக மீன்டும் மஞ்சப்பை பிரச்சாரம் தொடங்கப்பட்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்பாட்டில் துணிப்பைகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
 காலநிலை மாற்றத்திற்கான வலுவான கொள்கை நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் ஆதரவை உருவாக்குதல், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை வகுத்தல், நிலையான எதிர்காலத்தை நோக்கி சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் சூரிய மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தியை அதிகரித்தல், மக்கும் பொருட்களை பயன்படுத்துதலை ஊக்குவித்தல், மின் வாகனங்கள் பயன்பாட்டினை ஊக்குவித்தல், மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதில் உள்ளூர் சமூகங்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளித்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல், அவற்றின் நிலையான பயன்பாட்டை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கான துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஒரு கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளாகும்.
 மாவட்ட அளவிலான துறைசார் திட்டமிடல் மற்றும் கொள்கை அமலாக்க முன்முயற்சிகளில் காலநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடித்தல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. மேலும், மாவட்ட காலநிலை பணி ஆவணத்தை தயார் செய்யவும், உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை எதிர்த்து மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் காலநிலை மாற்ற கொள்கைகளை முறையாக பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து எதிர்கால சந்த்தியினருக்கு நிலையான வாழ்வை வழங்கிடும் நோக்கத்தோடும் இந்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
 இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரின் முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி,திருமலை வாசனுக்கு  வழங்கினார்கள்.
 இக்கருத்தரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி இயக்குநர் மனிஷ் மீனா,, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநிலப்பணி இயக்க உதவி இயக்குநர் திரட்டி பல்லி தருண் குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், அண்ணா பல்கலைகழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் பேராசிரியர் பழனிவேலு, பூவுலகின் நண்பர்கள் வெற்றிசெல்வன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடந்து
Next post மோடி அரசின் ஊழலை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள்-காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவின் மாநில தலைவர் கே.சந்திரசேகரன் பேட்டி,