35 இலட்சம் மதிப்புள்ள 149 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிரடி*
35 இலட்சம் மதிப்புள்ள 149 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிரடி*
திருப்பத்தூர் டிச23, ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள நந்தினி திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்களிடம் இருந்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து
மாவட்ட காவல்துறை சார்பாக புகார் மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் பிரேமாவிற்கு புகார்கள் அனுப்பப்பட்டதன் காரணமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து 149 உயர்ரக செல் போன்கள் சுமார் 35லட்சத்து 9ஆயிரத்து 500 மதிப்பில் மீட்கப்பட்ட
செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் செல்போனின் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.