ஊட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஊட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை அக்டோபர் 5-
ஊட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, இரண்டாம், ‘சீசன்’ துவங்கி உள்ள நிலையில், சுற்றுலா பயணியர் மலை ரயிலில் அதிகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், ஊட்டி எஸ்.பி., அலுவலகத்துக்கு, ‘ஊட்டி ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்படும்’ என, ஆந்திராவில் இருந்து வந்த மொபைல் போன் அழைப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஊட்டி, ஜி1 போலீசார் வழக்கு பதிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மிரட்டல் விடுக்கப்பட்ட மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்ததில், அந்த எண் ஆந்திராவில் இருந்து வந்தது தெரிந்தது.
மீண்டும் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.’இருப்பினும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.