கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் குடியிருப்பு வளாகத்திற்குள் உலா வரும் சிசிடிவி கேமரா பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் குடியிருப்பு வளாகத்திற்குள் உலா வரும் சிசிடிவி கேமரா பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கடந்த வாரம் இதே வீட்டில் நான்கு சிறுத்தை புலிகள் உலா வந்த நிலையில் இன்று கரடிகள் உலா வந்ததால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் ,ஒரு வீட்டின் தடுப்பு சுவர் மீது ஏறி குடியிருப்பின் உள் நுழைந்தது. சுமார் ஒரு மணிநேரம் அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்த இரு கரடிகளும் அதிகாலை 3.30 மணியளவில் மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.கடந்த வாரம் இதே குடியிருப்பு பகுதியில் இரண்டு கருஞ்சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள் உட்பட நான்கு சிறுத்தைகள் இதே வீட்டை சுற்றி சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை புலி மற்றும் கரடி நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்திருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, கரடி களை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.