திருப்பூர் தாராபுரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தாராபுரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ஓய்வூதியர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பீர்ஜாபர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்தவேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களின் நல உரிமைகளை திரும்ப வழங்கவேண்டும். 80 மாத காலமாக நிலுவையிலுள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பஞ்சப்படியை வழங்கவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பீர் ஜாபர், ராஜேந்திரன், நசுருதீன், நடராஜன், மேகவர்ணன், மணியன், நடராஜன், பாரதி, செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.