சோனா ஸ்டார் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் “ட்ராக் மை சோனா” (Track My Sona) என்ற மொபைல் செயலி அறிமுகம்
சோனா ஸ்டார் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்
“ட்ராக் மை சோனா” (Track My Sona) என்ற மொபைல் செயலி அறிமுகம்
சோனா ஸ்டார் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனை சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவைகளை சிறப்பாக செய்து வருகின்றன இந்த நிறுவனம் தற்போது “ட்ராக் மை சோனா” (Track My Sona) என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள சோனா கேரேஜ்யில் நடைப்பெற்றது.
சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் மற்றும் சோனா ஸ்டார் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள் கலந்து கொண்டு “ட்ராக் மை சோனா” என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்தார் இதனைத்தொடர்ந்து அவர் பேசும் பொழுது “ட்ராக் மை சோனா” செயலியானது பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகம், அபார்ட்மெண்ட் கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களின் பழுதுகளை எளிதில் கண்டறிந்து அதனை விரைவாக சரி செய்திட உதவும் ஒரு மொபைல் செயலியாகும்.
இந்த செயலியின் மூலம் பழுதடைந்துள்ள பொருளின் ஃயூஆர் கோட்டினை ஸ்கேன் செய்து எந்த விதமான பழுது உள்ளது என்பதை பதிவு செய்தால். அது எந்த இடத்தில் இருக்கின்ற பொருள் பழுதடைந்துள்ளது, எந்த விதமான நிலையில் பழுதாகியுள்ளது என்ற தகவல்கள் அது சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சென்றடையும் மேலும் அந்த குறைகளை குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யவில்லை எனில் அது அடுத்து நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் சென்றடையும் இதன் மூலம் பணிகள் விரைவாக செய்து முடித்திட முடியும் என்றார். மேலும் இந்த செயலியை பயன்படுத்துவதினால் குறைவான செலவில் நிறைவான பயன்களை அடைய முடியும், இந்த செயலியானது சேலத்தில் உறுவாக்கப்பட்டது இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார். மேலும் விவரங்களுக்கு [email protected],94425 92141
இந்த நிகழ்வின் போது வர்த்தக ஆலோசகர் சுரேஷ் ராவ், திட்டத் தலைவர் நாகராஜன், திட்ட மேலாளர் பிரதீப், குழுவினர் தனிஷா ஆகியோர் உடனிருந்தனர்.