புதிய யூனிசெக்ஸ் ஜிம் திறப்பு விழா
புதிய யூனிசெக்ஸ் ஜிம் திறப்பு விழா
மதுரை, நவ.22
மதுரை புது நத்தம் ரோடு, நாகனாகுளத்தில் புதிதாக அமைந்துள்ள யூனிசெக்ஸ் ஜிம் திறப்பு விழா நடந்தது. மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், திமுக பகுதி செயலாளர் சசிகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர்.
உரிமையாளர்கள் புகழேந்தி, மணிகண்டன், தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உரிமையாளர் புகழேந்தி கூறுகையில் யூனிசெக்ஸ் ஜிம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். எங்கள் ஜிம்மில் தனித்துவமான அனைத்து வகையான உடற்பயிற்சி கருவிகள், உணவு கட்டுப்பாடு குறித்த பயிற்சிகள், சத்தான உணவு, அனைத்து வகையான விளையாட்டு தொடர்பான உடற்பயிற்சி உபகரணங்கள், எடை குறைப்பு மற்றும் அதிகரிப்பு குறித்த பயிற்சி மற்றும் குறிப்புகள் அளிக்கப்படும். தினசரி உடற்பயிற்சி வகுப்புகள், நேர மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.