அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய வலைப்பந்து போட்டியில் தர்மபுரி மாணவி முதலிடம்

Spread the love

தருமபுரி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி மாணவி.கு.அகல்யா அரியானா மாநிலம், சோனிப்பேட் பகுதியில் நடைபெற்ற 46-வது தேசிய அளவிலான மூத்தோருக்கான வலைப்பந்து போட்டியில் (46th Senior National TENNI-KOIT Championship) தமிழக அணியின் சார்பில் பங்கேற்று, முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தங்கி, தருமபுரி அரசுக்கலைக்கல்லூரியில் இளங்கலை விலங்கியல் (B.Sc – Zoology) மூன்றாம் ஆண்டு பயின்று வரும், மாணவி .கு.அகல்யா அரியானா மாநிலம், சோனிப்பேட் பகுதியில் கடந்த நடைபெற்ற 46-வது தேசிய அளவிலான மூத்தோருக்கான வலைப்பந்து போட்டியில் (46th Senior National TENNI-KOIT Championship) 6 பேர் கொண்ட தமிழக அணியில் இடம்பெற்று, தமிழக அணியின் சார்பில் பங்கேற்று, முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்கள்.

 

இம்மாணவி திருவண்ணாமலை மாவட்டம், சிங்காரப்பேட்டை வட்டம், கட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தங்கி, தருமபுரி அரசுக்கலைக்கல்லூரியில் இளங்கலை விலங்கியல் (B.Sc – Zoology) மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றார்.

 

தருமபுரி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி மாணவி.கு.அகல்யா அரியானா மாநிலம், சோனிப்பேட் பகுதியில் கடந்த நடைபெற்ற 46-வது தேசிய அளவிலான மூத்தோருக்கான வலைப்பந்து போட்டியில் (46th Senior National TENNI-KOIT Championship) தமிழக அணியின் சார்பில் பங்கேற்று, முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி. நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்.கு.அகல்யா என்ற மாணவியை பாரட்டி, இப்போட்டி அல்லாது மேலும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று, தமிழ்நாட்டிற்கும், தருமபுரி மாவட்டத்திற்கும், தாங்கள் பயிலும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென வாழ்த்து கூறினார்கள்.

 

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர்.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்). வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .கவிதா, திட்ட இயக்குநர் பழங்குடியினர் நலன் .யு.ரமேஷ்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பொதுவழித்தடத்தை மீட்க கோரி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Next post புதிய யூனிசெக்ஸ் ஜிம் திறப்பு விழா