திருப்பூரில் சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி கைது.
திருப்பூரில் சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி கைது.
திருப்பூர், நவம்பர் 22-
திருப்பூரில், சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி வலம் வந்த கட்டட மேஸ்திரியை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், பவானி நகரில் வாலிபர்கள் இருவர், உளவுப்பிரிவு போலீசில் பணிபுரிவதாக மக்களிடம் கூறிக்கொண்டு வலம் வந்தனர். இது குறித்த தகவலின்படி, உளவுப்பிரிவு போலீஸ் என கூறிய இருவரிடம், தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
பாப்பநாயக்கன்பாளையம், பவானி நகர், 2வது வீதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ராசையா, 27, சி.பி.ஐ., அதிகாரியாக இருப்பதாகவும், அவரிடம் தலா, 15 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அதிர்ச்சியடைந்த போலீசார் ராசையாவை பிடித்தனர். போலி அடையாள அட்டைகளை வைத்து கொண்டு சி.பி.ஐ., அதிகாரி என அக்கம்பக்கத்தில் கூறியபடி, ராசையா சுற்றி வந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த, இரு வாலிபர்களிடம் உளவு பிரிவில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி, 30 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு போலி அடையாள அட்டையை கொடுத்து, ஒவ்வொரு பகுதிக்கு சென்றும் ‘போட்டோ’ எடுத்து வருமாறு கூறியது தெரிந்தது.
ராசையாவை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார், போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.