ஆப்பிள் வியாபாரி வைத்து இருந்த பணம் திருடி சென்ற நபரை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் குற்றவாளியை கைது செய்த காவல்துறை
டாட்டா ஏ.சி.இ வாகனத்தில் ஆப்பிள் வியாபாரி வைத்து இருந்த பணம் : திருடி சென்ற நபரின் சி.சி.டி.வி. காட்சிகள் – குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.
கோவை அக் 10,
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் டாட்டா ஏ.சி.இ நான்கு சக்கர வாகனத்தில் ஆப்பிள் வியாபாரம் செய்து வந்தார். கோவை திருச்சி சாலை சவுரிபாளையம் பிரிவில் உள்ள ஒரு உணவகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்று இருந்தார். அப்பொழுது வாகனத்தில் வைத்து இருந்த ரூபாய் 80,000 காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்தா கண்காணிப்புக்கு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது வாகனத்தின் அருகே சென்ற நபர் ஒருவர் பணத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் காவல்துறை விசாரணையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரெபய் அகமது. என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய பணத்தை செலவு செய்ததாக தெரிவித்து உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் பணத்தை திருடி விட்டு அவர் அங்கும், இங்கும் அலைந்து சாலை ஓரத்தில் அமர்ந்து இருக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.