பழனி நகராட்சியில் நடைபெற்ற, நகரமன்ற கூட்டத்தில், சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பழனி நகராட்சியில் நடைபெற்ற, நகரமன்ற கூட்டத்தில், சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம், தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது ,
கூட்டத்தில் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு கவுன்சிலர்கள்
கலந்து கொண்டு, தங்கள் வார்டுகளில் ஏற்படும் குறைகளை எடுத்துக் கூறினார்கள் அதனைத் தொடர்ந்து,
27 வது, வார்டு கவுன்சிலர் சுபா தமிழ்மணி கூறுகையில்,
1920 இல் நீதிக்கட்சி இருந்தபோது, சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும், இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,
பின்னர் 1956 இல், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது,
மேலும், 1982ல் மதிய உணவு திட்டத்தை முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர், சத்துணவு திட்டமாக கொண்டு வந்து அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவுகள் வழங்கினார்,
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர், ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டத்தில் வாரத்திற்கு ஐந்து முட்டைகள் வழங்கினார்கள்,
தற்போது,நமது தமிழக முதல்வர் தளபதியார், அவர்கள் ஊட்டச்சத்துடன் கூடிய மதிய உணவு, மற்றும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
மேலும்,ஒரு தாய்க்கு நிகராக நமது மாநிலத்தில் உள்ள குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு குழந்தைகளுக்கு
சத்தான உணவை வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளார் என்று,
தொடர்ந்து பேசிய 7வது வார்டு கவுன்சிலர்,
சுபா தமிழ்மணி,
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக பாடநூலில், சத்தான காலை உணவை வழங்கியவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், என்று குழந்தைகள் படிக்கும் அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும், நமது முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, நகர மன்ற கூட்டத்தில் முன்மொழிந்தார்…
அதனைத் தொடர்ந்து,
பழனி நகராட்சி சார்பாக நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில்,
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
இக்கூட்டத்தில்,நகர்மன்ற ஆணையர் , பழனி நகர் நல அலுவலர் ,பொறியாளர் மற்றும், பழனி வார்டு உறுப்பினர்கள் உட்பட, அனைவரும் கலந்து கொண்டனர்.