பழனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு
பழனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் செப் 7,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர் .
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை ,அடிவாரம் மற்றும் குளத்து பைபாஸ் சாலை என அனைத்து பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது .
எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இன்று போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு மேற்கொண்டனர் .
முன்னதாக பழனி பேருந்து நிலையம் , சன்னதி ரோடு, அடிவாரம் , குளத்து பைபாஸ் சாலை என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு, போக்குவரத்து நெரிசலை எப்படி குறைப்பது, வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, போன்ற ஆலோசனைகள் செய்யப்பட்டது.