பழனியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஏ பி ஏ மகளிர் கல்லூரி முதலிடம் பிடித்த அசத்தல்
பழனியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஏ பி ஏ மகளிர் கல்லூரி முதலிடம் பிடித்த அசத்தல்.
திண்டுக்கல் சஎப்4,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு என போட்டிகள் நடத்தப்பட்டன. 10 வயது முதல் 21 வயதுடைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் பம்பரமாய் சுழன்று கம்பு வீசியதும், சுருள்வாள் சுழற்றியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே கல்லூரி அளவிலான போட்டிகளில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு உலக விளையாட்டு சங்கம் சார்பில் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம், சுருள்வாள் போன்ற தற்காப்பு கலையை பாதுகாக்கும் வகையிலும், மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது .