கோவில்பட்டியில் ரூ.283.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவில்பட்டியில் ரூ.283.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், திட்டக்கூறு ஒப்படைப்பு வருவாய் திட்டம் 2019-2020ன் கீழ், புதிய யூனியன் அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. 2 தளங்களை கொண்ட இக்கட்டடத்தின் மொத்த பரப்பளவு 17326.80 சதுரடி. ஆகும். இப்பணி முழுவதும் முடிவடைந்ததையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர், புதிய கட்டடத்தை பார்வையிட்டனர். முன்னதாக, அமைச்சர் கீதாஜீவன் கல்வெட்டை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, ஊராட்சி ஒன்றிய கமிஷனர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஒன்றிய பொறியாளர்கள் சங்கர்சுப்பிரமணியன், மேரி, படிபீவி, திமுக., ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன் (மத்திய ஒன்றியம்), ராதாகிருஷ்ணன் (மேற்கு ஒன்றியம்), விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் பீட்டர், பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிருபர் S.முத்துக்குமார்