திமுக தலைவர் தலைமையில் நடைபெற உள்ள வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்திற்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு
திமுக தலைவர் தலைமையில் நடைபெற உள்ள வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்திற்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர் செப் 5, 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பூத் கமிட்டி) பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் படியூரில் நடைபெறுவதை முன்னிட்டு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வு துறை அமைச்சர் சு.முத்துச்சாமி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கழக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர்கள் மேயர் தினேஷ்குமார், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டபோது.