தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் துணிகர கொள்ளை சம்பவங்களை நடத்திய முகமூடி கும்பலின் தலைவன் கைது தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

Spread the love

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் துணிகர கொள்ளை சம்பவங்களை நடத்திய முகமூடி கும்பலின் தலைவன் கைது தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தாராபுரம் செப் 5

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் ராம் நகர் அருள் ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து பல்வேறு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து பீரோவை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் தாராபுரம் பகுதி மக்களை வீதியில் ஆற்றியது
இதனைத் தொடர்ந்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு போலீசாரால் தனிப்படை அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளின் நடமாட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வந்தனர் இதன் அடிப்படையில் ஏற்கனவே தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுன் வயசு 30 தேனி மாவட்டம் குப்பிய நாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ் 45 இதே மாவட்டம் ஜங்கிள் பெட்டியைச் சேர்ந்த முருகேசன் 52 ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் இந்நிலையில் இந்த முகமூடி கும்பலின் மூளையாக செயல்பட்ட தலைவன் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கும்பல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கொங்கு மண்டல பகுதியில் ஈரோடு நாமக்கல் திருப்பூர் பல்லடம் உடுமலை வெள்ளகோவில் ஆகிய பகுதிகளிலும் தங்கள் கைவரிசையை அரங்கேற்றியுள்ளனர் இந்நிலையில் தாராபுரம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அம்பேத்கார் நகர் காமாட்சிபுரம் மாணிக்கம் 29 என்பவனை கைது செய்தனர்
மாணிக்கத்திடம் நடத்திய விசாரணையில் முகமூடி கும்பலின் தலைவனாக செயல்பட்டது மாணிக்கம் தான் என்பதும் மாணிக்கத்தின் மீது தமிழ்நாட்டின் பல்வேறு தலைநகரங்களில் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து குற்றவாளி மாணிக்கத்தை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பி .ஏ.பி பாசனப்பகுதிகளுக்கு பயிர்கள் கால்நடைகளுக்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட பாசன விவசாயிகள் கோரிக்கை
Next post திமுக தலைவர் தலைமையில் நடைபெற உள்ள வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்திற்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு