திருப்பூர் அரசு பள்ளியில் தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் அச்சம் தவிர் திரையிடப்பட்டது
திருப்பூர் அரசு பள்ளியில் தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் அச்சம் தவிர் திரையிடப்பட்டது
திருப்பூர் செப் 9,
திருப்பூர் மாவட்டம் கருப்பு கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் தயாரிப்பில்
தேசிய விருது பெற்ற “அச்சம் தவிர்” தமிழ் குறும்படம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த அச்சம் தவிர் குறும் படத்தை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த குறும் படம் குறித்து மாணவ மாணவிகள் இடம் கருத்துரையாடால் நடத்தி மாணவ மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கப்பட்டது.இதில் சிறந்த பதில்களை அளித்தமாணவ, மாணவி களுக்கு பரிசுகளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் வழங்கி மாணவர்களிடம் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மகளிர் மாநில அணி தலைவி லதா அர்ஜுனன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் தங்கவேல்,
திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகள் நலன் கருதி அச்சம் தவிர் தமிழ் குறும்படத்தை திரையிட அனுமதி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர்
நந்தகோபாலன்,உதவி தலைமை ஆசிரியர் கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர் பெரும் மக்கள் அனைவருக்கும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் ஆசிரியர் தின வாழ்த்துகளையும்,நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
Super congratulations