ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசம் அயோத்தி மாவட்டம் அயோத்தியில் நடைபெறும் இந்த மகத்தான விழாவில் கலந்து கொள்வதற்கு இப்போதே பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் ஆயுத்தமாகி வருகிறார்கள்
நாடு முழுவதும் இதற்கான மக்கள் தொடர்பு இயக்கம் ஏற்பாடு ஆகியுள்ளது.
இதன் ஒருங்கிணைப்பு விழா மற்றும் அழைப்பிதழ்,பிரசாதம் வழங்கும் தொடக்க விழா இன்று எச்.பி.எப் ராமர் கோவிலில் நடைபெற்றது
இதில் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , சுரேஷ் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட பொறுப்பாளர், மோகன்ராஜ் மாவட்ட பாஜக தலைவர், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுசாமி, பாஜக மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன், பாஜக மாவட்ட பொருளாளர் டாக்டர் தருமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்திவரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறஉள்ளது பகவான் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பம் குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என
ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நாடு முழுவதும் மக்கள் தொடர்பு இயக்கம் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது . டிசம்பர் 31 தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை பஞ்சாயத்து/ வார்டு வாரியாக மக்கள் அனைவரையும் வீடு வீடாக தொடர்பு கொண்டு ஸ்ரீராமர் கோவில் படம்,
ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர கடிதம்,கருவறையில் பூஜை செய்த அட்சதை வழங்கபடும்
பிராணப் பிரதிஷ்டை நடக்கும் அன்று அணைத்து கோவில்களிலும் விசேஷ பூஜை நடைபெறும் மக்கள் தங்கள் வீடுகளில் , அன்று மாலை வீட்டுக்கு வெளியேகார்த்திகை தீபம் போல் குறைந்தது 5 தீபம்மாவது ஏற்ற வேண்டும்.
அன்று நமக்கு இன்னொரு தீபாவளி! யாக கொண்டாட வேண்டும் என கூறினார்