வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம்-மக்கள் பீதி
நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை கொண்டு செல்லப்பட்டது. இவர்களை தாக்கியது சிறுத்தையா அல்லது புலியா பகுதி மக்கள் பீதியில் உள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த உள்ள பந்தலூர் ஒட்டி உள்ள நெல்லியாலம், உப்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் வீட்டு விலங்குகளை வேட்டையாடி வருவது வழக்கமாக உள்ள நிலையில்,
நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை வழக்கம் போல் இப்பகுதி மக்கள் தேயிலை பறிப்பதற்காக சென்ற போது வள்ளி ,60 துர்கா ,53 சரிதா ,29 ஆகிய மூவரை வனவிலங்கு தாக்கி உள்ளதாகவும் இவர்களில் சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக சேர்க்கபட்ட பொழுது அதில் ஒருவர் மிகுந்த காயம் உள்ளதால் இவரை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் வனவிலங்குகள் வீட்டு விலங்குகளை தாக்கி வருது வழக்கமாக உள்ள நிலை இன்று மூன்று பேரை இந்த வனவிலங்கு தாக்கி உள்ளது. வனத்துறையினர் இதுவரை இவர்களை தாக்கியுள்ளது வனவிலங்கு சிறுத்தையா அல்லது புலியா என்று சந்தேகத்துடன் உள்ளன பகுதி மக்கள் புலி என்று கூறுவதாலும் இதன் கால் தடயம் வைத்து இப்பகுதிக்கு உலா வரும் வனவிலங்கு எது என்று கூற முடியும் தினமும் தற்சமயம் பகுதிக்கு இந்த வனவிலங்கு குடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன எனினும் பகுதி மக்கள் மீண்டும் யாரையாவது தாக்க நேரிடும் என்ற அச்சத்தில் இன்று தங்கள் வேலையை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் மிக விரைவில் இப்பகுதியில் உள்ள வனவிலங்கு வனத்துறையில் பிடிப்பதற்கு இப்பகுதி மக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்து வருவது வழக்கமாக உள்ளது .இன்று மூன்று பேரை தாக்கிய வனவிலங்கால் இப்பகுதி மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.