மாணவர்களுக்கு கற்றல் திறன்களை முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் புதுக்கோட்டைமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
மாணவர்களுக்கு கற்றல் திறன்களை முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும்
புதுக்கோட்டைமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
புதுக்கோட்டை,நவ.18.
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு மொழி மற்றும் கணிதப் பாடங்களின் அடிப்படை கற்றல் திறன்களை முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் பேசினார்.
புதுக்கோட்டை ஒன்றியம் கட்டியாவயல் குடியிருப்பு உட்பட்ட பாரதிந கர் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு ,மாண வர்களுக்கு பாராட்டு விழா, கையேடு வழங்கும் விழா, கலைவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி மணிவண் ணன் பேசியதாவது:இல்லம் தேடி கல்வியை குழந்தை மைய கற்ற லாய் சிறப்பாக எடுத்துச் செல்லும் தன்னார்வலர்கள் அனைவருக் கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.கொரோனா பேரிடர் காலத் தாக்கத்தின் விளைவாக தொடக்கநிலை மாணவர்கள் வெவ்வேறு கற்றல் நிலைகளில் உள்ளனர்.இக்கற்றல் இடைவெளியைப் போக்க தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது.
இக்கையேட்டினை பயன்படுத்தி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு மொழி மற்றும் கணி தப் பாடங்களின் அடிப்படை கற்றல் திறன்களை முழுமையாக கற்றக் கொடுக்க வேண்டும்.இக்கையேட்டில் ஒவ்வொரு பாடத்திலும் குழந் தைகளின் கற்றல் நிலையை அறிய முன்னறித் தேர்வு நடத்த வேண் டும்.
முன்னறிவுத் தேர்வு வினாக்களைக் கரும்பலகையிலோ அல்லது தா ள்களிலோ எழுதி மாணவர்களுக்கு தேர்வுநடத்த வேண்டும்.தன்னா ர்வலர்கள் ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலைக்கேற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சியளிக்க வேண்டும்.மாணவர்கள் அடிப்படைத் திறன்களைப. பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவுத் திறன் அட்டவ ணையில் (√) டிக் குறியிட வேண்டும் என்றார்.
முன்னதாக தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான கையேட்டி னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழ ங்கினார்,
புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு ( தொடக் கநிலை) தன்னார்வலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி யவர் ,மாணவர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் சார்பில் வா ங்கி வந்திருந்த சில்வர் தட்டினை பரிசாக வழங்கினார்.
நிகழ்வின் போது இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முனியசாமி ,அடப்பகார சத்திரம் பள்ளி தலைமை ஆசிரியை சிவமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை கட்டியா வயல் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வினோதா,மீனாட்சி,கலைச்செல்வி, மலர்வி ழி,பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.