தாராபுரம் சூளைமேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் குப்பை கழிவுகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்
தாராபுரம் சூளைமேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் குப்பை கழிவுகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் செப் 8,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரத்துக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் சுமார் 150 குடும்பகளுக்கு மேலானோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இருக்கும் வயல்வெளியில் இயற்கை உரம் தயாரிப்பதாக கூறி மக்கும் குப்பைகள்,மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் சாக்கடை கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கொட்டி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதியில் சாலையில் செல்பவர்கள் முகத்தை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள்,முதியவர்கள் நோய் தொற்று உள்ள கிருமிகள் பரவி வருவதால் வாந்தி,மயக்கம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.விளைவுகள் மக்கள் பாதிப்புக்குள்ளானதை அறிந்து மேலும் பாதிப்புகள் வராமல் இருக்க அந்த கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றிட வலியுறுத்தியும், அப்பகுதியில் வாழும் பொது மக்களின் நலன் கருதியும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த அதிகாரியும் அப்பிரச்சனையை தீர்வு செய்ய வருகை புரியாத காரணத்தினால் கழிவுகளை அகற்ற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் நகர செயலாளர் செந்தில்குமார்,விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் முத்தமிழ்வேந்தன், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன்,நகர பொருளாளர் கரிகாலன்,மாவட்ட துணை செயலாளர் ஆற்றல்ரசு,நகர துணைச் செயலாளர் இராச.உதயகுமார், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் ஆச.ரங்கநாதன் நகர செயற்குழு உறுப்பினர்கள் பிளவேந்திரன்,மோகன்குமார்,குமரேசன்சூளைமேடு முகாம் பொறுப்பாளர்கள் சுர்ஜீத்குமார்,சூர்யா,நாட்டுத்துரைபிரபாகரன் ,தினேஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடமும் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன் பொது மக்களின் கோரிக்கை ஏற்று உடனடியாக கழிவுகளை அகற்றியதுடன் மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.