கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், விண்ணப்பித்துள்ள முதியோர், விதவைகளுக்கான உதவித் தொகை வழங்க வேண்டும், வருமானம், குடியிருப்பு, வாரிசு சான்று வழங்குவதில் இருக்கும் முறைகேடுகளை சரி செய்திட வேண்டும், நில அளவீடு செய்யும் அதிகாரிகள் தாமதிக்கமால் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் தாசில்தார் சுசிலாவிடம் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசுப்பு, முத்துச்சாமி, மணிகண்டன், கணேசன், மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் கதிர்வேல், கண்ணன், அந்தோணிச் செல்வம், மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னால் மாநில செயலாளர் முத்துக் காந்தாரி, மற்றும் பெண்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிருபர் S.முத்துக்குமார்