கோவில்பட்டியில்பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்
கோவில்பட்டி : ஏப் – 27
தேச ஒருமைப்பாட்டிற்க்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், இந்திய கலாச்சார நட்புறக்கழகம் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் மாணிக்கராஜ், தமிழ் புலிகள் கட்சி வழக்கறிஞர் பீமராவ், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனிராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பொன்ஸ்ரீராம், AITUC உத்தண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.