புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி ஆலங்குடியில் ஐயப்பனுக்கு மாலை அணிய குவிந்த பக்தர்கள்
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி ஆலங்குடியில் ஐயப்பனுக்கு மாலை அணிய குவிந்த பக்தர்கள்
புதுக்கோட்டை . நவ.18.
கார்த்திகை மாதம் முதல் ஐயப்பனுக்கு மாலை அணிவிக
க பக்தர்க ள் குவிவதும், 48 நாட்கள் தீவிர விரதமிருந்து சபரிமலைக்கு யாத்தி ரை செலவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களின் வழக்கமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டின் காரணமா க பக்தர்கள் பலரும் மாலை அணிவித்தும் சபரிமலைக்குச் செல்ல முடியாத சூழலையும் சந்தித்து வந்தனர்.
இந்த சூழலில் இந்த வருடம் கொரோனா உள்ளிட்ட எந்த கட்டுப்பாடு ம் இன்றி சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் மாலை அணிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனை வழி பட்டுவிட்டு கருப்பு மற்றும் காவி நிற வேட்டிகளை அணிந்து குருசா மியிடம் மாலை அணிந்து கொண்டனர்.
இதே போல, நெம்மக்கோட்டை சித்தி வினாயகர் கோவில், கொத் தமங்கலம் வாழவந்த பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கோவில்களி ல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
48 நாட்கள் விரதம் இருக்கும் நாட்களில் தினந்தோறும் கோவில்களி ல் கூட குருசாமியின் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை நி னைத்து வழிபட்டு பாட்டுப் பாடி பஜனைகளில் ஈடுபடுவதும் வழக்க மாக உள்ளது.