ராதாபுரம் கிளை நூலகத்தில் நூலக வார விழா கொண்டாட்டம்
ராதாபுரம் கிளை நூலகத்தில் நூலக வார விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கிளை நூலகம் சார்பில் நூலகத்தில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நூலகர்கள் அஜிதா மற்றும் மேரிவில்மா தலைமை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் மணி வரவேற்புரை வழங்கினார்.ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராதாபுரம் வட்டாட்சியர் வள்ளிநாயகம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 27 மாணவ மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்ய பதிவு கட்டணத்தை நம்மால் முடியும் குழு லட்சுமணன் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் ஆசிரியர் சிவமதியழகன் , கொம்பையா , தினேஷ் உரக்கடை முத்து , லயன்ஸ்கிளப் பொருளாளர் ராஜசேகரன் , லயன்ஸ் கிளப் செயலாளர் பிராங்கிளின் , லிங்கம் , நம்மால் முடியும் குழு லட்சுமணன் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் பார்வதி , ஊசிகாட்டான் , ஆசிரியைகள் சுமித்ரா , சுபா , வழக்கறிஞர் மணி , கொத்தன்குளம் ஏசுராஜன், வார்டு உறுப்பினர் ஜான்துரை , நூலக உதவியாளர் பவுன்தமிழரசன் , ஜெயந்தி ,கணபதி, ராதை காமராஜ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நூலக வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் , வட்டாட்சியர் வள்ளிநாயகம் மற்றும் போக்குவரத்துறை ஊசிகாட்டான் ஆகியோர் 1000 ரூபாய் சந்தா செலுத்தி புரவலராக சேர்ந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.