*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவிகளின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி*
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவிகளின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி*
புவனகிரி டிச 1
கடலூர் மாவட்டம் புவனகிரி பெருமாத்தூர் பகுதியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் பயிலும் மாணவிகள் வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் நடராஜன் வழிகாட்டுதலின்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பெருமாத்தூர் கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா ,உதவி பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், ஆனந்தன், கமலா, மனிமொழி, அரவிந்தன் ஆகியோர் இந்த பேரணியை ஒருங்கிணைத்தினர். இந்த பேரணி மூலமாக புற்றுநோயினை தடுக்கும் நெறிமுறைகளை பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள் இதில் பங்கேற்ற மாணவர்கள் பேரணி மூலம் புற்றுநோய் விழிப்புணர்களின் அவசியத்தை தெரிந்து கொண்டனர்.