புதுக்கோட்டை அருகே காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற ம் தீர்ப்பு

Spread the love

புதுக்கோட்டை அருகே காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற ம் தீர்ப்பு

 

புதுக்கோட்டை டிச 1.

 

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32) இவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் முசுண்டமபட்டி பகுதி சேர்ந்த சேது (வயது 23 )என்ற பெண் ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

 

புதுக்கோட்டை அருகே ஒரு தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டா ம் ஆண்டு படித்து வந்தார் அப்போது அவரை பெண்கள் தங்கும் விடு தியில் தங்க வைத்து கல்லூரிக்கு செல்ல செல்வராஜ் ஏற்பாடு செய தார்.

 

செல்வராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உ ள்ளது இதில் குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவி கணவ ரை பிரிந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு சென்றார்.பின்னர்

 

இந்த விவகாரம் செய்துவிட்டு தெரியாமல் மறைத்து காதலித்து வந் தார் இந்நிலையில் கல்லூரி விடுமுறையின்போது சேது தனது பெற் றோர் வீட்டிற்கு சென்றார் விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்ட ம் சாத்தனூர் திரும்பினார்.

 

அப்போது செல்வராஜ் வீட்டில் வைத்து இருவருக்கும் தகராறு ஏற்பட் டது பெற்றோர் வீட்டிற்கு சென்றதை தட்டி கேட்டுள்ளார் இந்நிலையி ல் திருமணம் ஆனதை தன்னிடம் மறைத்து தொடர்பாக செல்வராஜ் இடம் கேள்வி எழுப்பினார்.

 

.இதில் தகராறு ஏற்பட்டதில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சேதுவின் மண்ணெண்ணெய் ஊற்றி செல்வ ராசு தீ வைத்தார் இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்

 

.இது தொடர்பாக காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல் வராஜை கைது செய்தனர் இந்த வழக்கில் முக்கிய ஜாமீன் பெற்று வெளியே வந்த செல்வராஜ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைம றைவாகினார்.

 

இதில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு கை து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு புதுக்கோ ட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார் .

 

இதில் செல்வராஜுக்கு திருமணமானதை மறைத்து காதலித்து வந் த குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனையும் பெண்ணை எரித்து கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2 லட்சம் அபராதமும் தொகை கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார்.

 

மேலும் அபராத தொகை ரூபாய் 2,1/2 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண் ணின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார் இந் த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார் தண்டனை விதிக்கப்பட்ட செல்வராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவிகளின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி*
Next post புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி