புதுக்கோட்டை அருகே 2 இடங்களில் மாட்டுவண்டி குதிரை எல்கை பந்தயம்.   

Spread the love
புதுக்கோட்டை அருகே 2 இடங்களில் மாட்டுவண்டி குதிரை எல்கை பந்தயம்.   
 
புதுக்கோட்டை,ஏப். 25:
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே
அமரசிமேந்திரபுரம் சக்தி விநாயகர் கோவில் சித் திரை திருவிழாவை முன்னிட்டு  இளைஞர்கள் மற் றும் ஊர் பொதுமக்களால் நடத்தப்பட்ட 13 -ம் ஆண் டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந் தயம்  நடைபெற்றது.
 
இந்த பந்தயம் காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காலை பிரிவில்
 பெரிய மாடு, கரிச்சான் மாடு ,நடுக் குதிரை என  மூன்று  பிரிவுகளாகவும், மாலை பிரிவில் நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, சிறிய குதிரை என  மூன்று பிரிவுக ளாவும் நடைபெற்றது.
இதேபோன்று அறந்தாங்கி அருகே மீமிசல் அடுத்த சேமங்கோட்டை கிராமத்தில் சித்திரை பெரும் திரு விழாவை முன்னிட்டு தொடர் இரட்டை மாட்டு வண் டி பந்தயம் நேற்று  நடத்தப்பட்டது.
 
 இதில்  நடைபெற்ற பந்தயத்தில்  புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, தஞ்சை  ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட ஜோடி மா ட்டு வண்டிகளும், 10- க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டி ஜோடிகள் நான் கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு து ள்ளிக்குதித்து  ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 
 
போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள்   சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சா லையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மா ட்டு வண்டி  மற்றும் குதிரை வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர்.
 
மேலும் இந்த பந்தயத்தில்  முதல் மூன்று  இடங்க ளை பிடித்த மாட்டு வண்டி  உரிமையாளர்களுக்கு    ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும்   வழங்கப்பட் டது. இந்த போட்டிகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா. 
Next post எல்ஜி நிறுவனம் ஈஜி சூப்பர் பிரீமியம்’ வரம்பை அறிமுகம்