தாராபுரத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் அருகே கள்ளுகடைகளை திறக்ககோரியும் கல்லசாராயம் ஒழிக்ககோரியும் பூரணமதுவிலக்கு அமல்படுத்தவேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர்அணி தலைவி மதிவாணி தலைமை தாங்கினார் மாவட்ட மகளிர்அணி பொதுச்செயலாளர் ஆயிஷா மாவட்ட துணை தலைவர் சங்கர்மகேஷ் பொதுச்செயலாளர் சுரபிமணி முன்னிலை வகித்தனர் மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கர் அவர்கள் மதுக்கடைகளுக்கு எதிராக கண்டன உரையாற்றினார் அப்போது தமிழகத்தில் ஊழல் திமுகவால் கல்லசாராயம் பெரிகிவிட்டது இதனால் பல குடும்பபெண்கள் பெரிய பாதிப்களுக்கு உள்ளாகியுள்ளனர் தாராபுரத்தில் அனுமத்தித்த நேரம் தாண்டி மதுபானபார்களில் திருட்டுதனமாக கரூர் போலி மதுபானங்கள் விற்கபடுகிறது சாராய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஒரு மதுபானகடையில் இருந்து 60000 ஆயிரம் ரூபாய் மாமுல் செல்கிறது அதேபோன்று ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் அனைவருக்கும் மாமுல் செல்கிறது என்று பேசினார்
அதன்பின்பு மாவட்ட பொருளாளர் சிவப்பிரகாசம் பேசுகையில் விவசாயிகள் மற்றும் தென்னை பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய இயற்கையாக கிடைக்கும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் அதனால் பலகுடும்பங்கள் முன்னேற்றம் அடையும் குடிப்பவர்கள் உடம்பு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பேசினார்..இந்த நிகழ்ச்சியில் நகர பொதுசெயலாளர், மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்..