புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக மாவட்ட  முதல் மாநாடு

Spread the love

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக மாவட்ட  முதல் மாநாடு

 

 
புதுக்கோட்டை,,செப்.12:

 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அகில இந்திய பெ ண்கள் முற்போக்கு கழகம் மாவட்ட முதல் மாநாடு மணிமே கலை தலைமையில் தனியா ர் திருமண மண்டபத்தில் நடை பெற்றது பெண்கள் கழகம் பேரணியாக வந்து வடகாடு முக்க ம் பஸ் ஸ்டாப்-ல் பரப்புரை பயணத்தை வரவேற்றனர்.
 
மாநாட்டில் ராஜலெட்சுமி முன்னிலையிலும் கிருஷ்ணவே ணி.மாநில குழு உறுப்பினர் ரேவதி. மாநில அமைப்பாளர் வளத்தான் மாவட்ட செயலாளர் சிபிஐ(எம்எல்)பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் சிபிஐ(எம்எல் ஆகியோர் கலந்து கொ ண்டு சிறப்புரையாற்றினர். 
 
பார்ப்பனிய- ஆணாதிக்க- பெண்கள் விரோத ஆர் எஸ் எஸ் – பா.ஜ.க ஆட்சியை வெளியேற்ற ஒன்றுபடுவோம். மாநாட்டு தீர்மானங்கள். 
 
தேசிய ஊரக வேலை திட்டத்தில் 200 நாள் வேலை, 600 நாள் கூலி வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிக்கு ம் நகராட்சிக்கும் விரிவுபடுத்து.முதியோர், கைம்பெண், மாற் றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3000 ஓய்வுதியம் வேண்டும். 
 
தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மை மீதான வெறுப்பு அர சியல், வன்கொடுமை தடுத்து நிறுத்தபட வேண்டும். உரிமை கள், கௌரவம் பாதுகாக்கபட வேண்டும். 
 
இலவசங்களுக்காக  ஏங்குவோர் ஏழைகள் என அவமானப்ப டுத்திய அமித்ஷா, மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அனை த்து பேருந்துகளிலும் பெண்கள் பயணம் செய்ய இலவசமா க்கு.
 
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலை நிறுத்து கலவரகாரர்களை உடனடியாக கைது செய். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
மீண்டும் மாவட்ட செயலாளராக மணிமேகலை தேர்வு செய் யப்பட்டார். வடகாடு முக்கம் ஆலங்குடியில் செப்-2 முதல் 13 வரையிலான   மக்கள் தொடர்பு பரப்புரை பயணம்)     சிபிஐ( எம்எல்) வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கா விடில் தொடர் வேலை நிறுத்தம் தொழில் துறையினர் பேட்டி
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடி அரசு பள்ளியில் விலையி ல்லா 572 சைக்கிள்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினா