நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Spread the love

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

 

நீலகிரி டிச 25,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும். நிலவுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய முறை பனிப்பொழிவு தாமதமானது.

மழை முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருகிறது.சுமார் 50 நாட்கள் தாமதத்திற்கு பின் நேற்று அதிகாலையில் ஊட்டியில் உறைப்பனி கொட்டியது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல பனி படர்ந்து காணப்பட்டது.

 

பணி காரணமாக கடும் குளிர் நிலவிய நிலையில் காலை வேலைகளில் தோட்ட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தாமதமாக துவங்கினாலும் வரும் நாட்களில் உறைபனி தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

. இதனால் தேயிலை செடிகள் மட்டுமின்றி புல்வெளிகள், செடி கொடிகள் கருகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கருத்தியல் பேச்சாளர் தோழர் மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
Next post நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது