எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக ஊட்டியில் மாவட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்:
எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக ஊட்டியில் மாவட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்:
நீலகிரி டிச 23,
சென்னை: எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்
எதிர்கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும்,பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடத்து வருவது நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்துக்கும் அவமானமாகும்.
துணை குடியரசு தலைவர் மற்றும் அவைத் தலைவரை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களை கண்டித்து இன்று (21-ம் தேதி) நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் ஊட்டியில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது …
மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன் , நகர செயலாளர் பிரவின் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள்,மகளீர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்