புதுக்கோட்டை அருகே 34 இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
புதுக்கோட்டை அருகே 34 இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
புதுக்கோட்டை .நவ.23.
ஆலங்குடி அருகேஉள்ள வேப்பங்குடி ஊராட்சியில் நேற்று 34 வீட்டு மனை பட்டாக்கள் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் .
ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி அனைவரையும் வரவேற்று பேசினார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடை பெற்றது
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி புதுக்கோட்டை வருகை கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் திருவருங்குளம் ஆணையர் ஆயி ஷாராணி . கோபாலகிருஷ்ணன் (வட்டார கிராம ஊராட்சி) ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் திருவரங்கும் மேற் கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தெற்கு ஒன்றிய செயலாளர் அரு. வடிவேல் ஆகியோர் முன்னிலையில் இலவச வீட்டு மனை பட்டாக்க ளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் முதலாவதாக வேப்பங்குடியில் நடைபெற்ற இலவச வீ ட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய ஆ ணையருக்கு வழங்கப்பட்ட புதிய கார் சாவியை அமைச்சர் மெய்ய நாதன் ஆயிஷா ராணியிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில்…
தேசிய அளவில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர் 75 பேருக்கு வ ருகின்ற 24 ஆம் தேதி சென்னையில் 6 கோடி மதிப்பீட்டிலா பரிசுக ளை தமிழக முதல்வர் வழங்கி கௌரவிக்க உள்ளார்-ஆலங்குடி அருகே உள்ள வேப்பங்குடியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அ மைச்சர் மெய்யநாதன் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வேப்பங்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமை ச்சர் மெய்யநாதன் 34 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசினார்.
ச
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:குஜராத்தி ல் நடைபெற்ற 36 வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வி ளையாட்டு வீராங்கனைகள் 350 பேர் பங்கேற்றனர். இதில் 25 தங்கம் 22 வெள்ளி 28 வெண்கல பதக்கம் என மொத்தம் 75 பதக்கங்களைப் பெற்று தேசிய அளவில் 5 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள னர்.
சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் வருகின்ற 24 ஆம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் ரூ 6 கோடி மதிப்பிலான பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்ட உள்ளார் என்றும் இது விளை யாட்டு வீரர்களை மேலும் உற்சாகமடைய வைத்து உலக அளவில் சாதனை புரிய தூண்டுகோலாக அமையும் என்றும் அமைச்சர் மெய் யநாதன் கூறினார்.நிகழ்ச்சியில் தில்லானா வருவாய் ஆய்வாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதேபோல் ஆலங்குடி அருகே உள்ள கேவி கோட்டை ஊராட்சியில் உள்ள உருமநாதபுரம் பேருந்து பஸ் நிறுத்தம் கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார நிகழ்ச்சிக்கு
கே வி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மங்களம் மெய்யார் தலை மையில் நடைபெற்றது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.