புதுக்கோட்டை அரசு பள்ளிக்கு கலையரங்கம் எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைப்பு.

Spread the love

புதுக்கோட்டை அரசு பள்ளிக்கு கலையரங்கம் எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைப்பு.

 

புதுக்கோட்டை நவ.23.

 

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம் பி கார்த்தி சிதம்பரம் நிதியில் கட்டப்பட்ட கலையரங்கத்தை நேற்று அவர் திறந்து வைத் தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 

கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி மற்றும் வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் புள்ளான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை யில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அப்போது அவர் கூறுகையில்

 

நீட் தேர்விற்கு முன்னதாக சாமாணியர்கள் யாரும் மருத்துவம் படிக்க முடியவில்லை. நீட் தேர்வின் காரணமாகத் தான் சாமாணியர்களின் குடும்பங்களில் இருந்தும் மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தேர்வா கிறார்கள்.

 

நீட் குறித்து மேடைகளில் அரசியல் பேசுவோருக்கு இது குறித்த புரி தல் கிடையாது -ஆலங்குடி அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி விழாவில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாணவர்களிடையே பேச்சு.

 

தேர்வு, டியூசன் உள்ளிட்ட பாடமுறையின் மீது தனக்கு வெறுப்பு இருப் பதாகக் கூறிய கார்த்தி சிதம்பரத்தின் பேச்சிற்கு மாணவர்களிடை யே உற்சாக கரகோஷம்*

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம். பி நிதியில் கட்டப்பட் ட புதிய கலையரங்கக் கட்டிடத் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத் தில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பி னர் கார்த்தி . சிதம்பரம் கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது,

 

தேர்வு, டியூசன் உள்ளிட்ட பாட முறைகள் மீது தனக்கு ஒரு வெறுப்பு இருப்பதாகவும் இது குறித்து தான் மேடயிலேயே பேசி விடுவதால் அடுத்த முறை தன்னை பள்ளி விழாக்களுக்கே யாரும் அழைப்பதில் லை எனவும், மாணவர்கள் தேர்வு குறித்தெல்லாம் கவலைப் பட வே ண்டாம் என கலகலப்பாக பேசினார்.

 

எம்பியின் இந்த பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் கடுமையான வர வேற்பு இருந்தது. கரகோஷங்கள் எழுப்பி உற்சாகத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

 

மேலும் பேசிய அவர், நீட் தேர்வின் காரணமாகத்தான் கொத்தமங் கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த வசீகரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளார். நீட் தேர்விற்கு முன்னர் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் மருத்துவப் படிப்பிற்குச் சென்றதில்லை,

 

நீட் தேர்வு நடத்தப்பட்ட பிறகு தான் சாமாணிய மாணவர்களும் மருத் துவப் படிப்பிற்கு தேர்வாகி வருகின்றனர். நீட் குறித்து மேடைகளில் பேசுபவர்களுக்கு நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை எனவும் விமர்சித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே 34 இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
Next post சி.கே கல்வி குழுமம் சார்பில் பட்டமளிப்பு விழா  – 905 மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.