சூரிய ஒளி மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பூர் திருநீலகண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் அரிதான நிகழ்வான சூரிய ஒளி மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி திராளான பக்தர்கள் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்.
திருப்பூர் ஆக் 30,
திருநீலகண்டபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நீலாம்பிகை உடனமர் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவிலில் வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் அரிதான நிகழ்வான சூரிய ஒளி மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி நடைபெறும்,
அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 15-ம்தேதியிலிருந்து தொடங்கி இன்று 30 -ம் தேதி வரை தொடர்ச்சியாக 15 நாளைக்கு சூரியனின் ஒளியானது மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் அரியநிகழ்வு நடைபெற்றது குறிப்பாக
கடந்த 20ஆம் தேதியிலிருந்து சிவ லிங்கத்தின் மூலவர் தலைப்பாகத்திலிருந்து கீழ்பாகம் வரைக்கும் சூரியனின் ஒளிபடுகின்ற காட்சியை
அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் பார்த்து பக்தியுடன் சிவபெருமானை மனம் உருக வணங்கி செல்கின்றனர்.
இத்தகைய சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் நிகழ்வானது திருப்பூரில் திருநீலகண்டபுரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் ஆலயத்தில் நிகழ்வது கண்கொள்ளாத காட்சியாக உள்ளது.