வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள்

Spread the love

வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள்

 

திருப்பத்தூர் ஆக் 30,

கள்ளக்குறிச்சியில் வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வட்டாச்சியர் மனோஜ் முனியனை தற்காலிக பணியிட நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வட்டாச்சியர் மனோஜ் முனியனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்தும் வட்டாச்சியர் மனோஜ் முனியனின் இடைகால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்

 

இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சாந்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் வருகைபதிவேட்டில் கையொழுத்திட்டு கலைஞர் மகளீர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 

அதேபோல் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வருவாய்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சூரிய ஒளி மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
Next post நகைசுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.