அதுல்யா சீனியர் கேர் மையத்தை கோவை மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

Spread the love

*கோயம்புத்தூரில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு வளாகத்தை தொடங்கும் அதுல்யா சீனியர் கேர்*

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 30, 2023: உதவப்படும் வாழ்க்கை மற்றும் இல்லத்திலேயே உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்கும் பிரிவில் பிரத்யேகமாக மூத்த குடிமக்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதுல்யா சீனியர் கேர், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான கோயம்புத்தூரில் தனது புதிய உதவப்படும் வாழ்க்கை குடியிருப்பு வளாகம் தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.

70,000 சதுரஅடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கோவையின் இந்த புதிய அதுல்யா சீனியர் கேர் வளாகம், வயது முதிர்ந்த நபர்களுக்கு உயர்தர பராமரிப்பையும், சௌகரியத்தையும் வழங்குவதில் அதுல்யா கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது. கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. எம். பிரதாப் ஐஏஎஸ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த வளாக தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்வளாகத்தில் மொத்தத்தில் 100 படுக்கை வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. குடியிருப்பாளர்களுக்கு விசாலமான மற்றும் சௌகரியமான வாழ்விட வசதியை வழங்கும் வகையில் இது ஒவ்வொன்றும் மிக கவனத்தோடும், நேர்த்தியோடும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நாம் வசிக்கும் அமைவிடம் நம்முடையது என்ற உணர்வையும், அந்தரங்க பாதுகாப்பையும் மற்றும் நம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற சூழலையும் பேணி வளர்க்கும் நோக்கத்தோடு இவ்வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அமைவிட வசதியும் மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத இரு பிரிவுகள் உட்பட, மொத்தத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் அடங்கிய குழு, அதுல்யா சீனியர் கேர் வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு, அதுவும் குறிப்பாக முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும், கனிவுள்ள தோழமை உணர்வும் கிடைப்பதை சிறப்பான, பயிற்சியளிக்கப்பட்ட இப்பணியாளர்கள் குழு உறுதிசெய்யும்.

முழுமையான நலவாழ்வு மீது அதுல்யா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதன் விரிவான பராமரிப்பு சேவைகளின் வழியாக அழகாக வெளிப்படுகிறது. மருத்துவ ஆதரவு, நலவாழ்வு செயல்திட்டங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், உடல்நலத்தைப் பேணுவதற்காக முதியோர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுமுறை திட்டங்கள் ஆகியவை அதுல்யா வழங்கும் சேவைகள் தொகுப்பில் சிலவாகும். இங்கு வாழும் மக்களின் உடல் சார்ந்த, உணர்வு சார்ந்த மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை சிறப்பான சூழல், நேர்த்தியான மருத்துவ சிகிச்சை, கனிவான அணுகுமுறை ஆகியவற்றின் வழியாக பேணுவதற்கு ஏற்ப இவ்வளாகம் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதால், மிக நவீன பாதுகாப்பு சாதனங்களும், நடவடிக்கைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குடியிருப்பாளர்களின் மனநிம்மதியை உறுதிசெய்ய பாதுகாப்பு அம்சங்களுடன் அவசரநிலை பதில்வினையாற்றலுக்கான அமைப்புகளும் இங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூரில் அதுல்யாவின் சேவை பற்றி பேசிய அதுல்யா சீனியர் கேர் -ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. G. ஸ்ரீனிவாசன், “மூத்த குடிமக்கள் வாழ்வதற்கு உகந்த நல்ல அமைவிடமாக கோயம்புத்தூர் இருக்கிறது. எங்களது பிரத்யேக வளாக திட்டத்தின் மூலம் இம்மாநகரில் எமது சேவையை தொடங்குவதில் நாங்கள் அதிக உற்சாகம் கொண்டிருக்கிறோம். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் முதியோர்களுக்கான இல்லங்கள் பற்றிய விழிப்புணர்வு கோயம்புத்தூரில் நன்றாக இருக்கும் நிலையில் அதுல்யா சீனியர் கேர் ஒரு புதுமையான, முன்னோடித்துவமான வாடகை ரீதியிலான மாதிரியை அறிமுகம் செய்கிறது. மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மாறிவரும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக இம்மாதிரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முற்போக்கு சிந்தனை அடிப்படையிலான இந்த அணுகுமுறை பலரும் பயன்படுத்தக்கூடியவாறு நெகிழ்வுத்தன்மையுள்ள ஒரு தீர்வை வழங்குகிறது. கோயம்புத்தூர் சந்தையில் இத்தகைய புதுமையான திட்டம் இன்னும் அரிதானதாகவே இருக்கிறது. உயர்நேர்த்தியான செயல்பாடுகள் மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் திறன் ஆகியவற்றின் மீது அதுல்யா கொண்டிருக்கும் மனஉறுதி, அதன் செயல்நடவடிக்கைகளின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படையாக தென்படுகிறது. உதவப்படும் வாழ்விட கருத்தாக்க திட்டத்தின் வழியாக முதியோர்களுக்கு பராமரிப்பையும், சௌகரியத்தையும் வழங்க வேண்டுமென்ற எமது குறிக்கோளையும், செயல்திட்டத்தையும் நாங்கள் தீவிர ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் செயல்படுத்துவதில் உறுதி கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.

அதுல்யா சீனியர் கேர் – ன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர். ஆர். கார்த்திக் நாராயண் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “கோயம்புத்தூர் மாநகரின் அறிவார்ந்த மக்களுக்காக எமது முன்னோடித்துவமான உதவப்படும் வாழ்க்கை வளாகத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வளாக குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்க்கையை நடத்த சிறப்பான சூழலை வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். முதுமையை எட்டுவது என்பது வாழ்க்கையின் மிக அழகான ஒரு காலகட்டம். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இதைத்தான் அதுல்யாவில் நாங்கள் மிக நேர்த்தியாக செய்கிறோம். சொந்த இல்லம் போன்ற சூழலை வழங்குவதற்கென இவ்வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு அமைந்துள்ள அத்தனை அம்சங்களும், உட்கட்டமைப்பு நிலைகளும், மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில்,, அவர்களது தினசரி வாழ்க்கையை எளிதானதாகவும், இனிதானதாகவும் ஆக்கும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் மூத்த குடிமக்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் மற்றும் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், பயனுள்ள வகையில் வாழ்வதற்கு அவர்களுக்கு உதவ அதுல்யா தீவிர முனைப்புடன் செயல்படும்.” என்று கூறினார்.

அதுல்யா சீனியர் கேர், சென்னை மாநகரில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக தனது வளாக செயல்பாடுகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. அத்துடன், பெங்களூரு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களிலும் அதுல்யா சீனியர் கேர் – ன் குடியிருப்பு வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது கோயம்புத்தூரிலும் புதிய வளாகம் தொடங்கப்பட்டிருப்பதால், தென்னிந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவப்படும் வாழ்விட வசதிகளை வழங்குவதில் அதுல்யா சீனியர் கேர் முன்னோடியாக திகழ்கிறது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேம்பியன் பட்டம் வென்றது.
Next post சூரிய ஒளி மூலவரான சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி திராளான பக்தர்கள் சாமி தரிசனம்