திருப்பூரில் சலவை தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ஆறுதல் கூறிய திருப்பூர் எம்பி சுப்பராயன்
திருப்பூரில் சலவை தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ஆறுதல் கூறிய திருப்பூர் எம்பி சுப்பராயன்
திருப்பூர் ஆக் 30,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் நெய்க்காரன்பாளையம் சலவைத் தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்டதை அறிந்து நேரில் ஆய்வு செய்து அரசுக்கு எடுத்துக் கூறுவதாக ஆறுதல் கூறிய திருப்பூர் எம்பி சுப்பராயன். சலவை தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்து ‘ இடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட சிவா குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியதுடன், பொது மக்களையும் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து நடந்திருக்கும் குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது, தமிழ்நாட்டில் அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் ,என்று வேதனைப் படுவதாகவும், இந்த பிரச்சனையையொட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரே பாதிக்கப்பட்டவரை மிரட்டியது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இது போன்ற குற்ற செயலில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பிரச்சினை தொடர்பான ஆவணங்களை படித்து விட்டு திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பின் மூலம் முழு கருத்தையும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து எடுத்துச் கூறுவதாகவும் தெரிவித்தார்,
இந்த நிகழ்வின் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் எளிய,ஏழைகளை மக்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்தார் .இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற சம்பவங்களை வேடிக்கை பார்க்காது என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துசாமி,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஈரோடுமாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி,ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் சின்னச்சாமி,திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக்,திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் மோகன்,ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் சின்னச்சாமி, உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அய்யாவு,கோல்டன் சிவா, பொன்னையன்,தற்சார்ப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வண்ணார் பேரவை, திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.