காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா
புவனகிரி அக் 4
கடலூர் மாவட்டம் புவனகிரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அருணாச்சலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் ஹபீப் ரகுமான் தலைமை தாங்கினார். செயலாளர் முருகவேல் வரவேற்றார் .விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆலோசகர் லியோன் ,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர் .துணை ஆளுநர் தீபக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புவனகிரி சுற்று வட்டார பகுதியில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தியடிகள் நினைவாக பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் டாக்டர் ராஜசேகரன், ராமலிங்கம் ,புனித ராமராஜ், சுரேஷ்குமார் , விக்ரமன், கோபிரத்தினம், சண்முகம், ரமேஷ் ,சந்தோஷ்குமார் ,கிருஷ்ணா, சதீஷ், செல்வகுமார் ,உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள், பிரமுகர்கள் ,ரோட்டரி குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை செல்வராஜ் ,முருகவேல் , ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.