சிதம்பரம் அரசினர் காமராஜர் மருத்துவமனையில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.

Spread the love

சிதம்பரம் அரசினர் காமராஜர் மருத்துவமனையில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

சிதம்பரம் அரசினர் காமராஜர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவப்பிரிவுகளின் போதுமான தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் இல்லை என பொதுமக்களிடம் தொடர்ந்து புகார்கள் வந்தது. அதனை
தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது நோயாளிகள் என்னிடம் போதுமான தண்ணீர் வசதி கழிப்பறை வசதிகள் மற்றும் கழிப்பறையில் தண்ணீர்
பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வேதனையோடு புகார் தெரிவித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்
கொண்டு வரபட்ட பல்வேறு திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழக அரசு முடக்கி
வைத்துள்ளதால் மக்கள் பணி எதுவும் நடைப்பெறவில்லை. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு போதுமான
கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தேவையான
மருத்துவ வசதிகள் கிடைத்திட வேண்டும் என்று தலைமை பொறுப்பு மருத்துவர் குமராதேவி அவர்களிடம் வலியுருத்தியுள்ளேன். நோயாளிகளின் அடிப்படை
தேவைகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் மருத்துவமனையினை அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுமக்களை கொண்டு முற்றுகை
போராட்டம் நடத்தப்படும் என்றார்.

ஆய்வின் போது கழக அம்மா பேரவை துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை ஏ.வி.சி.கோபி, குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், வார்டு செயலாளர் வீரமணி, வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன், ஐ.டி.விங் செயலாளர் மணிராஜ். திருவேங்கடம் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கிற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next post பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா?வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?