சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் புதிய சேவா மருத்துவமனை- தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகள் எம்.எல்.ஏ. திறந்து வைப்பு
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் புதிய சேவா மருத்துவமனை- தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகள் எம்.எல்.ஏ. திறந்து வைப்பு
சேத்தியாத்தோப்பு, அக் 4
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் புவனகிரி சாலையில் கடலு லூர் தெற்கு மாவட்ட தமிழக.வாழ்வுரிமை கட்சி செயலாளர் விடாமுயற்சி, மஞ்சக்கொல்லை சு.சேரலாதன் ,தலைமை ஆசிரியை வாசுகி இவர்களின் புதல்வன் டாக்டர் சேவா.முத்தமிழன் ஆகியோரின் புதிய சேவா மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. நடைபெற்ற இத்திறப்பு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் ,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைமையேற்று மருத்துவமனையை, திறந்து வைத்தார். விழா ஏற்பாடுகளை சேரலாதன்-வாசுகி மற்றும் டாக்டர் சேவா முத்தமிழன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர் இவ்விழாவில் மாநில துணைப்பொதுசெயலாளர் உ.கண்ணன், மஞ்சக்கொல்லை பேராசிரியர் மேகநாதன், பாலகுருசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வி.ஜி.சிட்டிபாபு, மாவட்டஇளைஞர் அணி வேல்முருகன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் அருள்பிரகாசம் உட்பட அனைவரும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் இராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் புவனகிரி மேற்கு ஒன்றிய தமிழக.வாழ்வுரிமைகட்சியின் செயலாளர் தில்லை நன்றி கூறினார்.