டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு
திருச்சி, டிச.1-
தமிழ்நாடு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு
திருச்சி வணிகவரித்துறை இணை ஆணையர் சுவாமிநாதனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது:- தமிழகத்தில் அண்மைக்காலமாக வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று தாங்களே பொருட்களை வாங்கி பின்னர் அதற்குரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சாட்டி வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பேரமைப்பின் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வணிகவரி உயர் அதிகாரிகளிடம் பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பேரமைப்பின் திருச்சி மாவட்ட பேரமைப்பு சார்பில் எனது தலைமையில் இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
சில்லரை வணிகர்களை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்தி, திரும்ப பெற வேண்டும் என்றார்.
மனு அளித்த போது திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பேரமைப்பின் மாநில இணை செயலாளர் ராஜாங்கம், மாநில துணைத்தலைவர்கள் சின்னசாமி, சுப்பிரமணியன், கந்தன், ரங்கநாதன், எஸ்.ஆர்.வி. கண்ணன், கே.எம்.எஸ். ஹக்கீம், ஆர்.எம். ரவிசங்கர், பெமினா அபுபக்கர், ஆறுமுகப்பெருமாள், செல்வா ரங்கராஜன், உமாநாத், இணைச் செயலாளர்கள் பத்மா ரமேஷ், அப்பா குமரன், குணா சின்னசாமி, கருப்பையா, ராஜா முகமது, காமராஜ், ஜானகிராமன், கமருதீன், பழனி, மாவட்ட செயலாளர் காதர் மொய்தீன், பொருளாளர் செந்தில், என்.பாலு, இளைஞரணித் தலைவர் தங்கராஜ், அப்துல் ஹக்கீம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.