அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது.   2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.

Spread the love

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.

 

 

கோவை நவம்பர் 30-

 

 

 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

 

 

 

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி உட்கோட்டம், மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் இளையராஜா சம்பவ இடமான தண்டு மாரியம்மன் கோவில் T.கோட்டம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தார்.

 

அப்பொழுது லாட்டரி சீட்டுகளை வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குணசேகரன் என்பவரது மகன் வினோத்குமார் (40) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 2140 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

 

இது போன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

 

இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212,

94981-01165 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நிறுத்த கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவிந்தராஜுலு தலைமையில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு
Next post வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட போலீசார்.