கோவையில் ஆசியா நகை கண்காட்சி இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது

Spread the love

கோவையில் ஆசியா நகை கண்காட்சி இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது

 

 

கோவை ஜனவரி 19,கோயம்புத்தூர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய நகை கண்காட்சி 2024 கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் 2024 ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.

 

ஆசியா ஜூவல்ஸ் கண்காட்சியில் தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான முக்கிய கண்கட்சியாக திகழ்கிறது. இக்கண்காட்சி கோவை, ரேஸ்கோர்ஸ், தாஜ் விவான்டா ஓட்டலில் 2024 ஜனவரி 19 இன்று துவங்கி வரும் 21ம்தேதி வரை நடக்கிறது. எப்போதும் வந்திராத தனித்துவமிக்க தங்க நகைகள், இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. அகில இந்திய அளவில் முன்னணி, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள், ஒரே குரையின் கீழ் கிடைக்கும்.

 

கண்காட்சியை கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனரும் செயலாளருமான முனைவர் வாசுகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கவுரவ விருந்தினராக நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் (மக்கள் தொடர்பு) முரளிதரன் பங்கேற்றார்.

 

இந்த ஆசிய நகை கண்காட்சியானது, உயர்தர நுண்கலை, பிராண்ட் தங்கம் மற்றும் வரை நகைகளுக்கு முக்கியத்துவம் பெற்றது. தற்போதுள்ள நுண்கலை தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், அரிதான கல் நகைகள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.

கோவையில் மிக அருமையான தங்க நகை கண்காட்சி இது. வரும் விழாக்காலத்திற்கும், திருணங்களுக்கும் உங்கள் நகைகளை இங்கு வாங்கலாம். முன்பதிவும் செய்யலாம். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகளை வாங்க நேர்த்தியான இடம். சர்வதேச தரம் வாய்ந்த நகைகளை தென்னிந்திய அளவில் இந்த கண்காட்சி இடம் பெறச் செய்துள்ளது.

 

மும்பை,பெங்களுரு, டில்லி, சென்னை மற்றும் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

அகில இந்திய அளவிலான இந்த கண்காட்சியில், வராஸ்ரீ ஜூவல்லர்ஸ் (பெங்களுரு), சீகல் ஜூவல்லர்ஸ் (டில்லி), நாகா கிரியேஷன்ஸ் (மும்பை), இபான் ஹவுஸ் (மும்பை), சிரியான் ஜூவல்ஸ் (மும்பை), ஜிவா ஜூவல்லரி (மும்பை), யுப் ஜூவல்லரி (மும்பை), என்ஏசி ஜூவல்ஸ் (சென்னை), டயமன்ட் ஜூவல்லரி (மும்பை), எப்இசட் ஜெம்ஸ் (ஜெய்ப்பூர்), பிஇஎம் டயமன்ஸ் (திருப்பூர்), அடுல் ஜூவல்லரி (டில்லி) மற்றும் பல நகரங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தின் முதல் டீசரை படக்குழுவினருடன் சேர்ந்து கோவையில் நடிகர் ரஞ்சித் வெளியிட்டார்
Next post ஜேஇஇ தேர்வில் ஆகாஷ் எஜூகேஷனல் கல்வி நிறுவனத்தில் படித்து கோவை மாணவர் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632 இடம் பெற்றுள்ளார்.