முதல் மனைவிக்கு வரதட்சணை டார்ச்சர் கொடுத்து தந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர் குடும்பத்தார் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரணை.

Spread the love

முதல் மனைவிக்கு வரதட்சணை டார்ச்சர் கொடுத்து தந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர் குடும்பத்தார் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரணை.

 

கோவை நவம்பர் 30-

 

 

 

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிரு ப்பதாவது:- எனக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் வரதட் சணையாக 50 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மறறும் திருமண செலவுக்காக ரூ.4 லட்சம் கொடுத்தனர்.

 

 

 

நான் எனது கணவருடன் அவரது வீட்டில் வசித்து வந்தேன். அப்போது எனது கணவரின் குடும்பத்தினர் எனது பெற்றோரிடம் இருந்து கார் மற்றும் செல்போன் வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து நான் எனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

 

 

 

இந்த நிலையில் எனது கணவருக்கு அவரது பெற்றோர் சேர்ந்த கடந்த 18-ந் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து உள்ளனர். எனவே என்னை ஏமாற்றி விட்டு எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

 

 

 

புகாரின் பேரில் கிழக்கு இளம்பெண்ணின் கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post செல்போன் மூலம் பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் உறவினர்களுடன் சேர்ந்து நயமாக பேசி வரவழைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்.
Next post 2 குழந்தையின் தாய், இளம் பெண் உட்பட 2 பேர் மாயம் போலீசார் விசாரணை,